×

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி குடியாத்தத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை; கலெக்டர் தகவல்

வேலூர்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகளான குடியாத்தம் தாலுகாவில் அமைந்துள்ள கடை எண்.11038 மற்றும் கடை எண்.11033 ஆகிய மதுபான கடைகள் வரும் 15ம் தேதி அன்று கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா என்பதால், அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என்று சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே கெங்கையம்மன் சிரசு ஊர்வல திருவிழா தினமான வரும் 15ம் தேதி ஒருநாள் மட்டும் குடியாத்தம் தாலுகாவில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளான கடைகள் மூடப்படும். அன்றை தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட இதர விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல் அன்றைய தினத்தில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Tasmac ,Gudiyatham ,Sirasu festival of ,Gengaiamman temple ,Vellore ,Collector ,Subbulakshmi ,Sirasu festival of the Gengaiamman temple ,Vellore District ,Tamil Nadu State Chamber of Commerce ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்