ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், மார்ச். 1: நீதிமன்ற  தீர்ப்புகள் அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த கோரி, தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம்  முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.  செயலாளர் சங்கரன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் பாலு, பொருளாளர்  தியாகராஜன் ஆகியோர் கோரிக்கைகள் சம்பந்தமாக உரையாற்றினர். கடந்த 2016ம்  ஆண்டு ஜன.1ம் தேதி முதல் நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைப்படி  உயர்வு தொகையை 119 சதவீதத்தில் இருந்து 164 சதவீதம் வரை உயர்த்தி  அகவிலைப்படி நிலுவையோடு வழங்க வேண்டும், அரசு பொறுப்பில், மாதாந்திர  பென்சன் தொகையை மாதந்தோறும் 1ம் தேதியே வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகள்  அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories:

>