×

பட்டமளிப்பு விழா

 

நாமக்கல், மே 12: நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் செல்வம் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாபு தலைமை தாங்கினார். அறங்காவலர் ஜெயம் செல்வராஜ், செயலாளர் டாக்டர் கவித்ரா நந்தினி, செயல் இயக்குநர் கார்த்திக், கல்லூரி முதல்வர் டாக்டர் ராமபாலன் மற்றும் துணை முதல்வர் டாக்டர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பதிவாளர் டாக்டர் செந்தில் குமார் கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
விழாவில், பல்கலைக்கழக தரவரிசை பெற்ற மாணவர்கள் மற்றும் துறை முதன்மையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal ,Selvam ,Technical ,College ,Dr. ,Babu ,Selvam Educational Institutions ,Managing Director ,Selvam Group of Companies ,Trustee ,Jayam Selvaraj ,Secretary… ,
× RELATED விவசாயியின் டூவீலரை எரித்த வாலிபர் கைது