டிராக்டர் கவிழ்ந்து மூதாட்டி பலி

உளுந்தூர்பேட்டை, மார்ச் 1: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு டிராக்டரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றனர். இந்த டிராக்டர் நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகில் சென்ற போது பின்னால் வந்த கார் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் டிராக்டர் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டரில் சென்ற குருவன்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி அரசாயி(60) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிராக்டரில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த குமார்(34), தனவேல்(35), அருணா(6), கிருஷ்ணவேணி(26), சக்கரவர்த்தி(55), அருள்மணி(35), கவாஸ்கர்(4), இளையராஜா(32), உத்திராபதி(19), மணிகண்டன்(24) உள்ளிட்ட 19 பேர் படுகாயமடைந்தனர்.  உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து

வருகின்றனர்.

Related Stories:

>