புறத்தாக்குடியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 30 பேர் காயம்

மணப்பாறை, மார்ச் 1: புறத்தாகுடியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிபாய்ந்த காளைகள் முட்டி 30 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் 675 காளைகள், 336 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புறத்தாகுடி புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. ஜல்லிக்கட்டை தாசில்தார் தமிழ்கனி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 675 காளைகள், 336 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் சீறிபாய்ந்த காளைகள் முட்டி 30 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், குக்கர், குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளானோர் பங்கேற்று கண்டுகளித்தனர். மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>