குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை, மார்ச் 1: குடிநீர் கேட்டு பொய்கைப்பட்டியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மணப்பாறை அருகே உள்ள பொய்கைப்பட்டியில் ஊராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை வீதிகளில் உள்ள குழாய்கள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் தொட்டி அருகே குழாய்கள் அமைக்கப்பட்டு அங்கு வந்து குடங்களில் தண்ணீர் பிடித்து கொள்ள ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. வழக்கம்போல தங்களுக்கு வீதிகளில் உள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க வலியுறுத்தி மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மணப்பாறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் ரோஸ்லின் மேரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இன்று மின்தடை

முசிறி துணை மின் நிலைய பகுதி: முசிறி, சிங்காரச்சோலை, பார்வதிபுரம், பழைய பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, புதிய பேருந்து நிலையம், சிலோன் காலனி, ஹவுசிங் யுனிட், தண்டலைப்புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டடி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Related Stories: