இன்று நடக்கிறது போலீஸ் ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

திருவெறும்பூர், மார்ச் 1: திருவெறும்பூர் அருகே போலீஸ் ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் போலீஸ் ஏட்டாக காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொட்டியத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அதனால் சோழமாநகரில் வீட்டை செல்வராஜ் பூட்டி வைத்துள்ளார். மேலும் நேரம் கிடைக்கும்போது வீட்டுக்கு செல்வராஜ் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 11ம் தேதி செல்வராஜ் சோழமாநகர் வீட்டுக்கு வந்து விட்டு சென்றார். அதன்பிறகு கடந்த 27ம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 2 பவுன் தங்ககாசு, மோதிரம் மற்றும் பட்டு புடவைகள், மேலும் வீட்டில் இருந்த டிவி, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>