முசிறியில் மின்மாற்றி பழுது 5 மணி நேர மின்வெட்டால் மக்கள் அவதி

முசிறி, மார்ச் 1: முசிறியில் நேற்று மதியம் 2 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கணினி மையங்கள், ஜெராக்ஸ் கடைகள், வீடுகளில் இல்லத்தரசிகள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் ஆகியோர் மிகுந்த சிரமம் அடைந்தனர். 2 மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டு இரவு 7 மணி வரை தொடர்ந்தது. 7 மணிக்கு மின்சாரம் வந்ததையடுத்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். மின்தடை குறித்து மின்வாரியத்துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, மின்மாற்றி பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. விரைவில் கூடுதல் மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>