மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வேளாங்கன்னியில் சிறப்பு பிரார்த்தனை

நாகை, மார்ச்1: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டும், பேராசிரியர் அன்பழகன் உடல்நலன் பெற வேண்டியும் திமுக சார்பில் வேளாங்கன்னியில் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது. கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வாஎடிசன் தலைமை வகித்தார். பேராசிரியர் அன்பழகன் உடல்நலன் பெற வேண்டி வேளாங்கன்னி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேளாங்கன்னிக்கு வருகை தந்த அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாங்கன்னி நுழைவு வாயிலில் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. வேளாங்கன்னி கடைவீதி, பஸ்ஸ்டாண்ட் என்று வேளாங்கன்னி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் திமுக கொடியேற்றப்பட்டது. வேளாங்கன்னி பேரூராட்சி செயலாளர் மரியதாஸ், வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>