சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

சீர்காழி, மார்ச் 1: சீர்காழி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 35வது ஆண்டுவிழா மற்றும் நிறுவனரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அவ்விழாவில் பெஸ்ட் கல்வி குழுமங்களின் நிறுவனர் கல்விமான் நடராஜன் முழு திருவுருவ சிலையை பெஸ்ட் கல்வி குழுமங்களின் இயக்குனர் அமுதா நடராஜன் திறந்து வைத்தார். பள்ளி தாளாளர் மாலை அணிவித்தார். மேலும் பெஸ்ட் கல்வி குழும உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். விழாவிற்கு சீர்காழி ஒன்றிய தலைவர் கமலஜோதி தேவேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திமுக பிரமுகர் முதல்நிலை ஒப்பந்தக்காரர் தேவேந்திரன் சிறப்புரை வழங்கினார். விழாவில் பள்ளியின் நிர்வாக அதிகாரி னிவாசன் வரவேற்றார். பள்ளி ஆண்டறிக்கையை முதல்வர் ராமலிங்கம் வாசித்தார். விழாவில்  நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி தாளாளர் ஆதித்யா ராஜ்கமல், பெஸ்ட் கல்வி குழுமங்களின் இயக்குனர்கள் டாக்டர் செந்தாமரைகண்ணன், டாக்டர் காயத்திரி செந்தாமரை கண்ணன் ஆகியோர் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பள்ளிபுரவலர் முத்துகிருஷ்ணன் வழங்கினார்.  நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி முதல்வர், பெஸ்ட் கல்லூரியின் முதல்வர் அருள்செல்வம் மற்றும் பெஸ்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மதனகோபால் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் தமிழ் ஆசிரியர் கோபாலகண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: