மாசி தெப்ப திருவிழாவையொட்டி நாகை அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் கொடியேற்றம்

நாகை, மார்ச்1: மாசிமாத தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நாகை வெளிப்பாளையம் ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது. நாகை வெளிப்பாளையம் ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பிரமோற்சவம் மற்றும் தெப்பத்திருவிழா நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (28ம் தேதி) விநாயகர் வழிபாடு, விக்னேஸ்வர பூஜை ஆகியவை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று கொடியேற்றப்பட்டது. சுவாமி திருவீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து வரும் 8ம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9ம் தேதி கடற்கரைக்கு சுவாமி புறப்பட்டு சமுத்திர தீர்த்தம் நடைபெறுகிறது. 10ம் தேதி கொடியிறக்கப்படுகிறது. 13ம் தேதி இரவு புஷ்பபல்லாக்கு விழாவும், 15ம் தேதி இரவு தெப்போற்சவமும் நடைபெறுகிறது.

Related Stories:

>