இறுதி அடைவுத்தேர்வு

விருதுநகர் மாவட்டம், ஒருங்கிணைந்த கல்வி சார்பில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் கற்போர்களுக்கான அடைவுத்தேர்வு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 825 பேர் கல்லாதோர்களாக கண்டறியப்பட்டு,  அடிப்படை எழுத்தறிவை வழங்கும் பொருட்டு செயல்பாடுகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் புதிய வயது வந்தோர் கல்வித் திட்ட சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 615 கற்போர் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரத்து 6 கற்போருக்கு அடிப்படை கல்வியறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மையங்களில் பயிலும் கற்போருக்கு  இறுதி அடைவுத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, உதவி மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜெய அனிட்டா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: