சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படைகள் அமைப்பு உடனடி சோதனை தொடங்கியது

சிவகாசி, மார்ச் 1: தமிழகத்தில் ஏப்.6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினரால் பரிசுப்பொருட்கள், பணப்பட்டு வாடா செய்யப்படாமல் தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனச்சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறக்கும் படை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படை நேற்று உடனடியாக சோதனையை தொடங்கியது. பறக்கும் படையினர் நேற்று சிவகாசி அருகே திருவில்லிபுத்தூர் ஹவுசிங் போர்டு செக்போஸ்ட் மற்றும் சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள திருத்தங்கல் செக்போஸ்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அருப்புக்கோட்டை

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  அருப்புக்கோட்டை சட்டமன்றதொகுதிக்கு பறக்கும்படை, வீடியோ குழு  நியமிக்கப்பட்டுள்ளது. மண்டல  துணை தாசில்தார் நாகேஷ் தலைமையிலும், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்  சங்கரலிங்கம் தலைமையிலும், மண்டல தாசில்தார் சோனையன் தலைமையிலும் பறக்கும்  படை மூன்று குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சார்பதிவாளர்  கூடலிங்கம் தலைமையிலும், வட்டாரவளர்ச்சி அலுவலக ஓவர்சியர் முத்து  சரவணக்குமார் தலைமையிலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேருஹரிதாஸ்  தலைமையிலும் நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ  சர்வலைன்ஸ் குழுவில் நகராட்சி டவுன் பிளானிங் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: