தூத்துக்குடி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி, மார்ச்1: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் முழுமையாக அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, பஞ்சாயத்து அலுவலர்கள் மேற்பார்வையில், சுவர்விளம்பரங்கள் அழிக்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் எழுதப்பட்டு இருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அதே போன்று அரசியல் கட்சி சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன. சில அரசியல் கட்சியினர் தங்கள் சுவர் விளம்பரங்களை வெள்ளை போர்டுகளை கொண்டு மறைத்துள்ளனர். மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இது தவிர தேர்தல் பிரிவு காவல்துறையில் துவக்கப்பட்டு முன்னெச்சரிக்கை வழக்குகள், தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories:

>