கட்டாரிமங்கலம் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம், மார்ச் 1: கட்டாரிமங்கலம், பேய்க்குளம் கோயிலில் மாசி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் மாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது. இதேபோல் பேய்க்குளம் சங்கரநயினார்புரம் சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை மற்றும் சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளல் நடந்து சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அன்னதானம் நடந்தது.

Related Stories:

>