குளத்தூரில் வாலிபருக்கு கத்திக்குத்து

குளத்தூர்,மார்ச் 1: குளத்தூரில் துக்கவீட்டிற்கு சென்ற வாலிபருக்கு கத்திகுத்து விழுந்தது. குளத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பெரியசாமி(28). கூலி வேலை செய்துவருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குளத்தூர் நடுத்தெருவில் உள்ள துக்கவீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த மேற்கு தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் மோகன், பெரியசாமியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மோகன் தனது வீட்டிற்கு சென்று மகன் கார்த்திக்கை அழைத்து வந்து இருவரும் மீண்டும் பெரியசாமியிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெரியசாமியை சரமாரியாக குத்திவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கத்திகுத்துப்பட்ட பெரியசாமியை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மோகன் மற்றும் கார்த்திக் இருவர் மீதும் குளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>