கலப்பைபட்டியில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா

ஓட்டப்பிடாரம், மார்ச்1: ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர், கலப்பைபட்டி ஆகிய கிராமங்களில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் புனரமைக்கப்பட்ட தெப்பக்குளம் மற்றும் சமுதாய நலக்கூடத்தினை கனிமொழி எம்பி திறந்துவைத்தார்.

ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள குலசேகரநல்லூர் கிராமத்தில் பழுதடைந்த தெப்பக்குளத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அதேபோல் கயத்தாறு தாலுகா, கலப்பைபட்டி கிராமத்தில் புதிதாக சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரவும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கனிமொழி எம்பி யிடம் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த கிராமத்தினர் வலியுறுத்தினர். அதன்படி வெற்றி பெற்றதும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் தெப்பக்குளத்தை சீரமைக்க ரூ,13 லட்சமும் சமுதாய நலக்கூடம் கட்ட ரூ.25 லட்சம் நிதியை கனிமொழி எம்பி உடனடியாக ஒதுக்கீடு செய்தார். பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த26ம் தேதி நீராழி தெப்பக்குளத்தையும் சமுதாய நலக்கூடத்தையும் மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, சண்முகையா எம்எல்ஏ, யூனியன்சேர்மன் ரமேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தலைமைசெயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>