தூத்துக்குடியில் போயா படகு போட்டி

தூத்துக்குடி, மார்ச்1: தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை புனித தோமையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு போயா படகு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் பங்கேற்றனர். அவர்கள் கரையில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் கடலுக்குள் சென்று மீண்டும் கரைக்கு திரும்பி வந்தனர். இந்த போட்டியை ஜேசுபாலன், செந்தூர் பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி நாட்டுப்படகு நலச்சங்க தலைவர் ஜெபமாலை, செயலாளர் பாண்டி, பொருளாளர் லூர்துராஜ், துணைத்தலைவர் உதயகுமார், துணை செயலாளர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>