×

நெய்தலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

தோகைமலை, மே 9: கரூர் மாவட்டம் நங்கவரம் காவல் சரகம் நெய்தலூர் அருகே மேலப்பட்டி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்கள் பதுக்கி விற்பதாக நங்கவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியில் நங்கவரம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர. அப்போது சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (33). வாரிக்கரை பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டு உள்ள கஞ்சா போதை பொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். நங்கவரம் போலீசார் விரைந்து சென்று பாலமுருகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பாலமுருகனிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Neythalur ,Thogaimalai ,Nangavaram police ,Tamil Nadu government ,Melapatti ,Nangavaram ,Karur district ,
× RELATED கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் கலை, கைவினைப் பொருட்கள் பயிற்சி