கந்தர்வகோட்டை, மே9: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவர்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது. எம்சாண்ட், பி.சாண்ட், ஜல்லி வகைகள் விலையை குறைக்க வேண்டும் என அரசு கூறியும் குவாரி உரிமையாளர்கள் குறைந்ததாக தெரியவில்லை. சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளது. இதேபோல் கம்பிகளில் விலையும் உயர்ந்து உள்ளது. கட்டுமான பொருள்களில் விலையை தனியார் நிர்ணயம் செய்யமால் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் தனியார் குவாரி உரிமையாளர்களை கனிமவள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்
