தேரிக்குடியிருப்பு கோயிலில் அன்னதான கூடம் திறப்பு

உடன்குடி,மார்ச்1: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் ரூ.54.30லட்சத்தில் அன்னதான கூடம் திறப்பு விழா நடந்தது. தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.

இக்கோயிலில் திருவிழா காலங்களில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.  இக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ54லட்சத்து 30ஆயிரத்தில் புதியதாக அன்னதான கூடம் கட்டப்பட்டு உள்ளது. இதனை காணொலியில்   முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது கோயிலுள்ள அன்னதானகூடத்தில் இந்து அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் உதவிஆணையர் ரோசாலி சுமதா, கோயில்ஆய்வாளர் பகவதி, தக்கார் பொன்னி, செயல்அலுவலர் காந்திமதி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் செயல்அலுவலர் கலைவாணர், கோயில் கணக்கர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: