வேலூர், மே 9:தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 49 மாணவர்கள், 8 ஆயிரத்து 437 மாணவிகள் என்று மொத்தம் 15 ஆயிரத்து 486 பேர் எழுதினர். ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து முடிந்தது. இதனால் மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அருசு தேர்வுகள் துறை அறிவித்திருந்தது. அதற்கேற்ப விடைத்தாள் திருத்தும் பணி முடிந்ததும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.
