நெடுங்குளத்தில் காமராஜர் முழு உருவ வெண்கலசிலை

சாத்தான்குளம், மார்ச் 1: தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமாகா சார்பில் சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் காமராஜர் வெண்கல சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. தெற்கு மாவட்டத்தலைவர் எஸ்டிஆர்.விஜயசீலன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் வட்டார தமாகா தலைவர் முரசொலிமாறன் வரவேற்றார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி பங்கேற்று, காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசுகையில், நெடுங்குளத்தில் காமராஜர் சிலை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த புண்ணியம். மக்களுக்கு குறித்த நேரத்தில் திட்டங்களை தந்து அனைவரையும் அரவணைக்கும் அரசாக அதிமுக உள்ளது. தற்போது மகளிர் சுயஉதவிக்குழு கடனை தள்ளுபடி செய்து ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்தி வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இந்த தொகுதியில் சண்முகநாதன் எம்எல்ஏவின் வெற்றியும் உறுதி. தேர்தலில் தமாகா தொண்டர்கள் கள பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களித்து தொகுதியை நல்ல வளர்ச்சி நிலைக்கு கொண்டு வர வேண்டும்’ என்றார்.முன்னதாக சாத்தான்குளம் பேருராட்சி முன்னாள் தலைவர் தங்கத்தாய், வடக்கு மாவட்டத் தலைவர் கதிர்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சிவபால், மாவட்ட மேலிட பார்வையாளர் சிந்தா சுப்பிரமணியன், முன்னாள் எம்பி ராம்பாபு, மாநில வர்த்தக அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, முன்னாள் எம்எல்ஏ ராஜகோபால் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் மாநில செயலாளர் மால்மருகன், செயற்குழு உறுப்பினர் தங்கமணி, வர்த்தக அணி பொதுச்செயலாளர் சண்முகவேல், வடசென்னை மாவட்ட வர்த்தக அணி தலைவர் கணேசன், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, தூத்துக்குடி மாநகர தலைவர் ரவிக்குமார், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அதிமுக அவைத்தலைவர் திருப்பாற்கடல், சாத்தான்குளம் யூனியன் சேர்மன் ஜெயபதி, ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டி, ராஜ்நாராயணன், விஜயகுமார், நகர செயலாளர் குமரகுருபரன், தமாகா வட்டாரத் தலைவர்கள் இளையராஜா, முருகேசன், நெடுங்குளம் பஞ்.தலைவர் சகாயஎல்பின், மாவட்ட ஜெ.பேரவை இணைசெயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமாகா நகரத் தலைவர் விஜய் நன்றி கூறினார்.

Related Stories:

>