×

அனைவரையும் உள்ளடக்கிய குடியேற்றம்: ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

 

நியூயார்க்: அனைவரையும் உள்ளடக்கிய குடியேற்றம் மற்றும் வலுவான ஆட்கடத்தல் தடுப்பு சட்டம் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் குடியேற்றத்திற்கான உலகளாவிய ஒப்பந்தத்தின் இரண்டாவது சர்வதேச குடியேற்ற மறுஆய்வு மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், குடியேற்றம் என்பது இறுதியில் மக்களை பற்றியது. அவர்களின் அபிலாஷைகள், மீள்திறன் மற்றும் பங்களிப்புக்களை பற்றியது.

சட்டவிரோத குடியேற்றம், ஆட்கடத்தல் மற்றும் சமூக பாதுகாப்பில் உள்ள இடைவெளிகள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் குடியேற்றத்திற்கான அனைவரையும் உள்ளடக்கிய மனிதாபிமானமான மற்றும் எதிர்காலத்திற்கு தயாரான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. நியாயமான மற்றும் நெறிமுறை சார்ந்த இடம்பெயர்வுக்கு நிலையான பாதைகளை உருவாக்குவதற்காக இந்தியா 23 நாடுகளுடன் விரிவான இருதரப்பு இடம்பெயர்வு ஒப்பந்தங்களையும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளதுடன் மேலும் பல ஒப்பந்தங்களை தொடர்ந்தும் வருகின்றது” என்றார்.

Tags : India ,UN ,New York ,United Nations ,International Migration Review Forum ,Global Compact on Migration ,United Nations… ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்...