×

இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தல்: பிரதமர் கெய்ர் கட்சி படுதோல்வி

 

லண்டன்: இங்கிலாந்தில் உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் ஸ்டார்மரின் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆளும் பிரதமர் ஸ்டார்மரின் லேபர் கட்சியானது பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜல் பாரேஜ் தலைமையிலான வலதுசாரிக் கட்சியான ரிபார்ம் யுகே கட்சியானது நூற்றுக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. லேபர் கட்சியின் கோட்டையாக இருந்த இங்கிலாந்தின் வடக்கில் உள்ள ஹார்ட்லிபூல் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற இடங்களை கைப்பற்றியுள்ளது.

லேபர் கட்சியின் இந்த தோல்வியானது 2024ம் ஆண்டு ஜூலையில் பதவிக்கு வந்த பிரதமர் ஸ்டார்மர் மீதான அதிருப்தியை பிரதிபலிக்கின்றது. அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தூண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைக்கு பிரதமர் ஸ்டார்மர் தப்பித்தாலும், 2029ம் ஆண்டுகள் நடத்தப்பட வேண்டிய தேசியத் தேர்தலில் அவர் கடும் தோல்வியை சந்திக்கக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : UK ,Keir ,London ,Prime Minister Starmer ,England ,Starmer ,Labour Party ,
× RELATED ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல்...