×

பிளஸ் 2 தேர்வில் சத்தி எஸ்ஆர்டி யுனிவர்சல் பள்ளி மாணவர்கள் சாதனை

 

சத்தியமங்கலம், மே 9: பிளஸ் 2 பொதுத்தேர்வில் சத்தியமங்கலம் எஸ்ஆர்டி யுனிவர்சல் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் எஸ்ஆர்டி யுனிவர்சல் பள்ளியைச் சேர்ந்த 96 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், முகமது சாகித் 600க்கு 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கவுதம் 580 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவி வேணுசா 576 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்தனர். தேர்வு எழுதிய 96 மாணவ, மாணவியரும் அனைத்து பாடங்களிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பள்ளி நிறுவன தலைவர் ஜானகிராமன், பள்ளி தாளாளர் ராஜலட்சுமி, பள்ளி துணைத் தலைவர் பிரணவ், நிர்வாக அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Sathi SRT Universal School ,Sathyamangalam ,SRT Universal School ,
× RELATED சேறும் சகதியுமாக மாறிய மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி