வாகன முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட கோரிக்கை

உத்தமபாளையம், மார்ச் 1: உத்தமபாளையம் பகுதியில், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் அதிக திறன் வாய்ந்த பல்புகளை பயன்படுத்துவதால், எதிர் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவைகள் மீது கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையம் பகுதியில் கம்பத்தில் இருந்து தேனிக்கு செல்லும் மெயின் ரோடும், போடிக்கு செல்லும் மெயின்ரோடும் உள்ளன. இந்த வழித்தடங்களில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளன. குறிப்பாக கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், சரக்கு லாரிகள் அதிகமாக சென்று வருகின்றன.

இந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளில் அதிக திறன் வாய்ந்த பல்புகளை பயன்படுத்துவதால், எதிர் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களில் அதிக திறன்வாய்ந்த பல்புகளை அகற்ற வேண்டும் அல்லது கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தேனி, உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: