×

அறந்தாங்கி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

அறந்தாங்கி, மே. 8: அறந்தாங்கி அருகே சுடலைவயல் செல்லியம்மன் திருக்கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுடலைவயல் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.

போட்டிகள் பெரிய மாடு பிரிவில் 25 ஜோடி மாடுகளும் , கரிச்சான்மாடு பிரிவில் 25 ஜோடி மாடுகள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத பந்தயத்தில் பெரியமாடுகள் பந்தய தூரம் 8 மயில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது, கரிச்சான் மாடுகளுக்கு பந்தய தூரம் 6 மயில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் பந்தய தூரத்தை மாடுகள் போட்டி போட்டு இலக்கிற்க்கு சீறிப்பாய்ந்தன. எல்லைக்கோட்டில் இருந்து சாரதிகள் மாட்டு மாட்டுவண்டிகளை ஓட்டி சென்றபொழுது ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து வெற்றி பெற வேண்டும் என மாடுகளை அங்குமிங்கும் இழுத்தடித்து ஓட்டிச் சென்றனர். போட்டியை சாலையில் இருபுறமும் பொதுமக்கள் ஏராளமானோர் நின்று கொண்டு விசில் அடித்து கைதட்டி உற்சாகமாக மாட்டு வண்டி போட்டியை கண்டு ரசித்தனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags : Aranthangi ,Chitra Pournami festival ,Sudalaivayal Selliyamman Temple ,Selliyamman Temple ,Sudalaivayal village ,Pudukkottai district… ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்