சின்னாளபட்டியில் குப்பைக் கிடங்காக மாறிய பேரூராட்சி சமுதாயக்கூடம்

சின்னாளபட்டி, மார்ச் 1:  சின்னாளபட்டி நகர கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பஸ்நிலையம் அருகே சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடத்தையும், 15வது வார்டு பகுதியில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடத்தையும் 10 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.மேட்டுப்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்ததால் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பஸ்நிலையம் அருகே உள்ள சமுதாயக்கூடத்தை முறையாக பராமரிக்காததால்  புதர் மண்டிக் கிடப்பதோடு குப்பைக் கிடங்காகவும் மாறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ``குறைந்த செலவில் இப்பகுதி மக்கள் திருமணங்கள் மற்றும் காதணி விழாக்களை நடத்தி வந்தனர். கடந்த சில வருடங்களாகவே பேரூராட்சி நிர்வாகம் சமுதாயக் கூடத்தை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் சமுதாயக்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது’’ என்றனர்.

Related Stories: