தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தும் மூடப்படாத எம்ஜிஆர் சிலை

திண்டுக்கல், மார்ச்1: தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தும் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை மூடப்படாமல் உள்ளது. தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு என பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திண்டுக்கல்லில் அரசியல் கட்சி போஸ்டர்கள், பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுவர்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை அழிக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை மறைக்கப்படாமல் உள்ளது. எனவே, சிலையை மறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>