மாசாணி அம்மன் திருவீதி உலா

ஆனைமலை, மார்ச். 1: ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நேற்று நடைபெற்றது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை கடந்த 24ம் தேதி நடைபெற்றது. பக்தர்கள் குண்டம் இறங்கும் திருவிழா 27ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து கோயில் வளாகம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் திருவீதி உலா மற்றும் பக்தர்கள் மஞ்சள் நீராட்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>