தெற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பொள்ளாச்சி, மார்ச் 1: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாளையொட்டி  கோவை  தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் உள்ள ‘உதவும் உள்ளங்கள்’  முதியோர் காப்பகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு,   இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி தலைமை தாங்கி, உணவு வழங்கும்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நகர துணை செயலாளர் கார்த்திகேயன்,  பொருளாளர் சாந்துமுகமது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜோதிநகர்  செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விடுதி காப்பாளர்  பிரபாகரன் தலைமையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துதெரிவித்து  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சார்பு அணி  நிர்வாகிகள் மணிமாறன், சபாரிசாகுல், வடுகை லிங்கதுரை, மணிகண்டன்,  வெங்கடேஷ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>