வியாபாரிகளை அரசு புறம் தள்ளியது

வால்பாறை,  மார்ச். 1: தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வால்பாறையில்  பல்வேறு நிகழ்சிகளில் நேற்று பங்கேற்றார். அதன் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிர்  இழந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் வழங்வேண்டும். அனைத்து  வகையிலும் அரசு வியாபாரிகளை புறம் தள்ளி உள்ளது. பேரிடர் காலத்தில்  உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை வசம் உள்ள கடைகளின் வாடகை 6 மாத  காலத்திற்கு ரத்து செய்ய கோரிக்கை வைத்தோம். வணிகர் நல வாரியம் முழுமையாக  நடைமுறைப்படுத்தவேண்டும். தற்போது விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரி சுமையும் அதிகம் ஏற்படுகிறது.

எனவே  பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். அரசு வரியை மட்டுமே வருவாயாக  பார்க்கிறது. எனவே குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. வருகின்ற  ஆட்சியாளர்களிடத்தில் இது குறித்து கோரிக்கை வைப்போம். புதிய ஆட்சியாளர்கள்  பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். உடன்  மாநில இணைச்செயலாளர் கணேசன், கோவை மாவட்ட தலைவர்  இருதயராஜா, மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட துணை தலைவர் ஹரிகிருஷ்ணன்,  வால்பாறை நிர்வாகிகள் ஜெபராஜ், ஷாஜு, ஏசுதாஸ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Stories:

>