நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி, மார்ச் 1: பொள்ளாச்சி  பல்லடம் ரோட்டில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று, நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு செயலாளர்கள் மற்றும் வாக்குசங்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. நகர அவைத்தலைவர் வடுகை பழனிசாமி தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர்கள் கார்த்திகேயன், விஜயா, நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை  வகித்தனர். நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் வரவேற்றார்.  இதில்,  மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி கலந்துகொண்டு, வாக்குச்சாவடி  முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.  வழக்கறிஞர் அணி  மருதராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கவுதமன், தர்மலிங்கம், கண்ணன், மாவட்ட  பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாணிக்கராஜ், தர்மராஜ், சாந்துமுகமது,  சார்பு அணி நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், அப்துல்சத்தார், நிஜாமுதீன்,  ரஞ்சித், விஜயகுமார், திருமலைராஜா, சதீஸ் தொழிற்சங்க செயலாளர் கண்ணசாமி,  பாத்திமாஅக்பர், ஆகி மூர்த்தி, சிவக்குமார், வட்ட செயலாளர்கள் பழனிசாமி,  ஜெய்லாப்தீன், கரியாம்பட்டி செல்வராஜ், ராஜசுதாகர், ராஜன், வடிவேலு, ஸ்வீட்  நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது, சட்டமன்ற தேர்தலையொட்டி 18 வயது நிறைவடைந்தவர்களை கணக்கெடுத்து, புதிய  வாக்காளர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க  நடவடிக்கை எடுப்பது. திமுக  ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் தற்போது திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் குறித்து  வாக்காளர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்துவது. மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணியினர்  கிராமங்கள் தோறும் வீடு, வீடாக  சென்று உதய சூரியன் சின்னத்தில்  வாக்குசேகரிக்கும் பணியை உடனே மேற்கொள்வது. திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழாவை தேர்தல் நடத்தை விதிமுறைக்குட்பட்டு கொண்டாடுவது.  மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு ஒன்றுப்பட்டு  பாடுபடுவது’  உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>