கேண்டீன் வாங்கி தருவதாக ரூ.4.46 லட்சம் மோசடி

கோவை, பிப்.28:   கோவை மேட்டுப்பாளையம் ரோடு பாரத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் ஓட்டல் நடத்த முயன்றார். ஏற்கனவே செயல்படும் ஓட்டல் கேண்டீன் குத்தகை அடிப்படையில் வாங்கி நடத்த திட்டமிட்டிருந்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன தூத்துக்குட்டி உடன்குடியை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஓட்டல் கேண்டீனை குத்தகைக்கு வாங்கி தருவதாக உறுதி அளித்தார். மேலும் அவர் தினேசிடம் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கேன்டீன் வைப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார். இதற்கு முன்பணமாக 5 லட்ச ரூபாய் வேண்டும் என  கேட்டுள்ளார். தினேஷ் 4.46 லட்ச ரூபாய் வரை செல்வக்குமாரிடம் கொடுத்தார்.  பணத்தை வாங்கி கொண்ட செல்வக்குமார் கேண்டீன் வாங்கி தரவில்லை. பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக சாயிபாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>