கொங்கன்செருவு கிராமத்தில் எருதாட்டம் கோலாகலம்

கிருஷ்ணகிரி, மார்ச் 1:  பட்டலப்பள்ளி கொங்கன்செருவு கிராமத்தில் நடந்த 45ம் ஆண்டு எருது விடும் திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பர்கூர் ஒன்றியம் பட்டலப்பள்ளி கொங்கன்செருவு கிராமத்தில், 45ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்கும் காளைகளை, கால்நடைத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பங்கேற்க அனுமதித்தனர். சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, அதனிடையே எருதுகளை ஓட விட்டனர். காளைகளை  குறிப்பிட்ட தூரம் வரை ஓடவிட்டு, அதில் குறைந்த நேரத்தில் ஓடி கடந்த  காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, 30 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ₹3 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை ஜெகதீசன், ஜெயராமன், குப்புசாமி, கர்ணன், அண்ணாதுரை, சக்திவேல், மாதப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

விசிக

ஆர்ப்பாட்டம்தேன்கனிக்கோட்டை, மார்ச் 1:  தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொண்டரணி மாநில துணை செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவமனையில் நவீன வசதிகள் செய்து தரவேண்டும், தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டி தரவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories:

>