தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 91 துணை ராணுவத்தினர் தர்மபுரிக்கு வருகை

தர்மபுரி, மார்ச் 1:  தர்மபுரி மாவட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட, 91 துணை ராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் மிகவும் பதற்றம், பதற்றமான வாக்குச்சாவடிகள் 400 என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு, துணை ராணுபடையினரை பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 91பேர் அடங்கிய ஒரு கம்பெனியை சேர்ந்த, துணை ராணுவத்தினர் தர்மபுரிக்கு வந்தனர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐகள் உள்ளனர். இவர்களை தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போது தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தங்கியுள்ளனர்.

Related Stories:

>