சட்டமன்ற தேர்தல் எதிரொலி 484 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

தர்மபுரி, மார்ச் 1: சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக, தர்மபுரி மாவட்டத்தில் 484 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அதிக மலை மற்றும் வனக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை ஒட்டிய பகுதியில் உள்ள விளைநிலங்களை பாதுகாக்கவும், வனவிலங்குகளை விரட்டவும் கிராமபுறங்களில் அனுமதி பெற்று நாட்டுத்துப்பாக்கி வைத்து உள்ளனர். இவ்வாறு மாவட்டத்தில் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் 484 உள்ளது. இந்த துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க, தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சட்டமன்றப் பொதுத் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும், அவர்களது துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை வைத்திருத்தல், எடுத்துச் செல்தல் ஆகியவை தடை செய்து ஆணையிடப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: