இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

உடுமலை, மார்ச் 1: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணன், நீலகிரி மாவட்டம் சேரம்பாடி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். கோவை துடியலூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஆனந்தநாயகி, மடத்துக்குளம் காவல் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். தளி இன்ஸ்பெக்டர் அன்னம், துடியலூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மயிலம்பாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் கவிதா லட்சுமி, தளி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சிவகுமார், குடிமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். குடிமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், கோமங்கலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை கோவை சரக டிஐஜி நரேந்திரன் பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>