உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு பறக்கும்படை குழு நியமனம்

உடுமலை, மார்ச் 1: சட்டப்பேரவை தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்கவும், வீடியோ எடுக்கவும் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தலா ஒரு அதிகாரி, ஒரு போலீசார், ஒரு வீடியோ கிராபர் இருப்பார்கள். பொதுமக்கள் இந்த குழுவினரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உடுமலை தொகுதிக்கான பறக்கும்படை குழுவில் கூட்டுறவு துணை பதிவாளர் அனந்தகுமார், முருகவேல், மற்றொரு குழுவில் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை 9364649613, 9524465291 மற்றும் 98406 51686, 9498177397 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மடத்துக்குளம் தொகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் மற்றும் ரகு, மற்றொரு குழுவில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கோபிநாத் மற்றும் முகம்மது ஆஷிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை 7402607189, 9498176627 மற்றும் 6380075956, 9498178087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>