காங்கயம் மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம், மார்ச் 1: காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், ஆகிய மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவசாயிகளும், வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு. நேற்று 119  கால்நடைகள் வந்திருந்தன.

இதில், காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.67 ஆயிரம் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்கப்பட்டது.மொத்தம் 57 கால்நடைகள் ரூ.20 லட்சத்திற்கு விற்பனையானதாக சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர் .

Related Stories:

>