ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடுமலையில் கிரிக்கெட் போட்டி

உடுமலை, மார்ச் 1: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில், இந்திராநகர் கிளப் மூலம் சின்னவீரம்பட்டியில் நேற்று கிரிக்கெட் போட்டி தொடங்கியது. மாவட்ட வர்த்தக அணி தலைவர் மெய்ஞான மூர்த்தி தலைமை வகித்தார். உடுமலை நகர செயலாளர் மத்தீன் போட்டிகளை துவக்கி வைத்தார். வரும் 7ம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது. முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை, 2ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 3ம் பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பை, 4ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.

போட்டி துவக்க நிகழ்ச்சியில், உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் திருமலைச்சாமி மற்றும் ரங்கசாமி, தனபாலன், கனகசபாபதி, அரசன், ரயில் நாகராஜ், ஊராட்சி  தலைவர் கலாவதி பழனிசாமி, துணைத்தலைவர் வீராத்தாள், மயில்சாமி, சாமி (எ) கிருஷ்ணசாமி, சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>