மார்ச் மாதம் முழுவதும் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்

காங்கயம், மார்ச் 1: திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ம் தேதி 68வது பிறந்த நாள் விழாவை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும், சார்பு அணிகளின் நிர்வாகிகளும், ஒன்றிணைந்து மார்ச் மாதம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்து முகாம், ரத்ததான முகாம், கண்தானம், முதியோர், ஆதரவற்றோர் குழந்தைகள், மாற்று திறனாளிகளுக்கு உணவுகள் வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும், மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்திட வேண்டும். கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வதோடு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>