நீலகிரியிலிருந்து கேரளா சென்று வர உள்ள கட்டுபாடுகளில் தளர்வு செய்ய கோரிக்கை

ஊட்டி,மார்ச்1: நீலகிரி மாவட்ட மக்கள் கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர உள்ள கட்டுபாடுகளில் தளர்வு செய்திட வேண்டும் என சிபிஎம்., கட்சி வலியுறுத்தி உள்ளது. சிபிஐ., எம்., கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இjன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட எல்லைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட மக்களின் வாழ்வு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

அண்டை மாநிலமான கேரளாவிற்கு குறிப்பாக வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டத்திற்கு அரசுப்பணிகள், தனியார் நிறுவனங்களில் கட்டிட பணிகள், தோட்ட வேலைகள், கடைகளில் பணியாற்றுவோர், கூலி வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து பகுதி மக்களும் எல்லை தாண்டி சென்று வர முடியாத நிலை உருவாகிறது. அதேபோல் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது சொந்த பணிகளுக்காக சென்று வருகின்றனர். தற்போதைய அறிவிப்பின்படி எல்லைகளில் கட்டுபாடுகள் உள்ளதால் சாதாரண மக்களின் அன்றாட பணிகளுக்கும், குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கும் தடையாக உள்ளது. இது பரிசீலிக்கப்பட்டு தற்காலிக பாஸ் முறை ஏற்பாடு செய்து நீலகிரி மாவட்ட மக்களும், வயநாடு, மலப்புரம் மக்களும் வந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்.

Related Stories:

>