×

மக்களவையில் ஒவ்வொரு 6 பாஜ எம்பிக்களில் ஒருவர் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

 

புதுடெல்லி: மக்களவையில் உள்ள ஒவ்வொரு ஆறு பாஜ எம்பிக்களில் ஒருவர் வாக்குத்திருட்டு மூலமே தங்களது இடத்தை பிடித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வாக்குத்திருட்டு மூலம் சில நேரங்களில் தனிப்பட்ட இடங்கள் திருடப்படுகின்றன. வேறு சில நேரங்களில் ஒரு முழு அரசே திருடப்படுகின்றது. மக்களவையில் உள்ள 240 பாஜ எம்பிக்களில் ஏறக்குறைய ஒவ்வொரு ஆறாவது எம்பியும் வாக்குத்திருட்டு மூலமே தங்களது இடத்தை பெற்றுள்ளனர். அவர்களை அடையாளம் காண்பது கடினமல்ல.

பாஜவின் சொந்த சொல்லாடலிலேயே நாம் அவர்களை ஊடுருவல்காரர்கள் என்று முத்திரை குத்தலாமா? அரியானாவின் நிலை என்ன? அங்கே முழு அரசாங்கமே ஒரு ஊடுருவல்காரர் தான். அவர்கள் தங்களது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் நிறுவனங்கள் -வாக்காளர் பட்டியல்களையும் தேர்தல் செயல்முறையையும் சிதைப்பதற்கு அவர்கள் கையாளும் அதே நிறுவனங்கள் தான். அவர்களது உண்மையான பயம் உண்மை. ஏனெனில் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட்டால் அவர்களால் இன்று 140 இடங்களை கூட வெல்ல முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : BJP ,Lok Sabha ,Rahul Gandhi ,New Delhi ,
× RELATED தமிழகத்​தை சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர்...