×

எகிறி குதிப்பதை தடுக்க தலைமை செயலகத்தின் கேட்டில் எண்ணெய் தடவும் போலீசார்: வித்தியாசமான வியூகத்தால் பரபரப்பு

சென்னை: எகிறி குதிப்பதை தடுக்க, தலைமை செயலக நுழைவாயில் கேட்டில் எண்ணெய் தடவும் போலீசாரின் வித்தியாசமான வியூகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. புதிய அரசின் பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள விஜய், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் தலைமை செயலகத்திற்கு சென்று தனது முதல் கையெழுத்தை இடவும், முக்கிய புதிய திட்டங்களை அறிவிக்கவும் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதையொட்டி, தலைமை செயலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, விஜயை நேரில் காண தொண்டர்கள் கூடுவார் என்பதால், அவர்களின் கட்டுப்பாடற்ற கூட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தலைமை செயலகத்தின் நுழைவாயில்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள இரும்புக் கம்பிகள், தடுப்புச்சுவர்கள் போன்ற இடங்களில் போலீசார் எண்ணெய் தடவியுள்ளனர். இதன் காரணமாக, ரசிகர்கள் அல்லது தொண்டர்கள் கம்பிகளை ஏறி உள்ளே நுழைவதைத் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. பொதுவாக, விஜய்யின் நிகழ்வுகளில் சிலர் மரங்கள், கட்டிடங்கள் அல்லது இரும்புக் கம்பிகள், போஸ் கம்பங்களில் ஏறி பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chennai ,Tamil Nadu Assembly elections ,Chennai… ,
× RELATED விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு...