×

பவானி ஆற்று நீரை திருடுவதாக எல்.பி.பீ. முறைநீர் பாசன விவசாயிகள் குற்றச்சாட்டு

ஈரோடு, மார்ச் 1:  ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் 2.47லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் 35லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகி வருகிறது. பவானி ஆற்றில் குழாய் பதித்து, ஆற்று நீரை கிணறுகளுக்கு பாய்ச்சி அந்த தண்ணீரை மோட்டர் மூலம் சட்ட விரோதமாக பல கி.மீட்டருக்கு தூரம் எடுத்து சென்று திருடி பயன்படுத்துகின்றனர். பாசன ஆயக்கட்டு விவசாயிகளும், கடை மடை விவசாயிகளும் கடுமையாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

 இது குறித்து கீழ்பவானி முறை நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் துணை தலைவர் ராமசாமி கூறியதாவது: பவானி ஆறு, காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக தண்ணீரை எடுத்து வந்தவர்கள் மீது கடந்த 2003ம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு பேரில், தண்ணீர் திருட்டு தடை செய்யப்பட்டது. தற்போது, பலர் குழுக்களாக சேர்ந்து ஆற்றில் இருந்து 200மீட்டர் தூரம் கரைகளுக்கு அருகே கிணறுகள் வெட்டி, உயர்சத்தி மோட்டர் பம்புகள் நிறுவி, மின் இணைப்பு பெற்று ஆற்றுநீரை கிணறுகளுக்கு இணைத்து, தண்ணீரை பல கி.மீட்டர் சட்ட விரோதமாக கொண்டு சென்று பயன்படுத்தி வருகின்றனர். மின் வாரியமும் எவ்வித உச்சவரம்பும் இல்லாமல் மின் இணைப்பினை வழங்கி வருகிறது.

இதில், கோபி வட்டம் பெருந்தலையூர் கிராமத்தில் தடப்பள்ளி பாசன நிலத்தில் கிணறு அமைத்து 400 எச்.பி. மோட்டார் பம்பு மூலமும், பெருமுகை கிராமத்தில் 120 எச்.பி. மோட்டார் மூலமும், அந்தியூர் மூங்கில்பட்டி கிராமத்திலும், குப்பாண்டம்பாளையம் கிராமத்திலும் சட்ட விரோதமாக கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளளது. இதற்கு ஒரு சில அதிகாரிகளும், அரசியல் கட்சியினர் உதவியாக இருந்து வருகின்றனர். எனவே, மின்வாரியம் எந்த ஒரு கிணற்றிற்கும் 10எச்.பி. என உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். நீர் உறும் அளவினை நடுவர் குழு மூலம் உறுதிப்படுத்தி இணைப்பு வழங்க வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆற்று நீரை திருடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு ராமசாமி கூறினார்.

Tags : Bavani river ,
× RELATED தனியார் தொழிற்சாலை கழிவுநீர் பவானி...