தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவ வீரர்கள் ஈரோடு வருகை

ஈரோடு,  மார்ச் 1:  ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக  சட்டீஸ்கரில் இருந்து சிறப்பு ரயிலில் 92 துணை ராணுவ வீரர்கள் நேற்று ஈரோடு  வந்தனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை  பாதுகாக்கும் வகையில், அனைத்து மாவட்டத்திலும் துணை ராணுவ வீரர்கள்  பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில், ஈரோடு மாவட்டத்தில்  ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, அந்தியூர்,  கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சட்டீஸ்கர்  மாநிலத்தில் இருந்து துணை ராணுவத்தினர் 92 பேர் இன்று அதிகாலை சிறப்பு  ரயில் மூலம் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தனர். அவர்களை ஈரோடு மாவட்ட  போலீஸ் அதிகாரிகள் வரவேற்று, போலீஸ் வாகனங்களில் அழைத்து சென்று கோபியில்  உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் மற்றொரு ரயிலில் 130 பேர்  கொண்ட துணை ராணுவ குழுவினர் ஈரோடு வந்தனர்.

அவர்கள் நாமக்கல்  மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து 260 பேர்  கொண்ட இரு குழுவினர் ஈரோடு வந்தனர். அவர்கள் திருப்பூர் மாவட்ட  பாதுகாப்பு பணிக்கு அந்தந்த மாவட்ட போலீசார் தலைமையில் அனுப்பி  வைக்கப்பட்டனர். அரியலுார், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் வேன்,  பஸ்கள் நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் வந்து ரயிலில் வரும் துணை  ராணுவத்தினரை காத்திருந்து அழைத்து சென்றனர்.

Related Stories:

>