நெட் கவரேஜ் இல்லாத 18 வாக்குசாவடிகள் வீடியோ பதிவு செய்ய முடிவு

ஈரோடு, மார்ச் 1: ஈரோடு மலைப்பகுதிகளில் 18 வாக்குசாவடிகளில் இணையதள வசதி இல்லாததால், வாக்குபதிவு நடவடிக்கைகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவின் போது, முறைகேடுகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ஒவ்வொரு வாக்குசாவடி நிகழ்வுகளும் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குசாவடியிலும் வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,741 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மலைப்பகுதிகளான தாளவாடி, அந்தியூரில் மட்டும் 118 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தியூர் தொகுதியில் 2 வாக்குசாவடிகளும், பவானிசாகர் தொகுதியில் 16 வாக்குசாவடிகள் என மொத்தம் 18 வாக்குசாவடிகளில் இணையதள வசதி என்பது முழுமையாக இல்லை. இதனால், இந்த வாக்குசாவடிகளை தேர்தல் ஆணையம் ஆன்லைனில் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 18 வாக்குசாவடிகளும் நிழற்பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வாக்குபதிவு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக வீடியோ கவரேஜ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>