ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல்

ஈரோடு, மார்ச் 1:  ஈரோடு  பெருந்துறை சாலை யாழ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (36). இவர் தனியார்  மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2  நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது,  அங்கு வந்த மொடக்குறிச்சி, களத்துபின்னாம்பாளையத்தை சேர்ந்த  கார்த்திக் (30), ஈரோடு மூலப்பாளையம் சந்திரசேகர், ரங்கம்பாளையம் ஜீவா நகரை  சேர்ந்த ரமேஷ் (41) ஆகிய 3 பேரும் சேர்ந்து, கடனாக வாங்கி இருந்த ரூ.1  லட்சம் பணத்தை எப்போது தருவாய் என கேட்டு தகராறு செய்துள்ளனர். பின்னர்  திடீரென்று மூவரும் சேர்ந்து விஜயகுமாரை தாக்கி கொலைமிரட்டல்  விடுத்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த விஜயகுமார் சிகிச்சைக்காக ஈரோட்டில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து  விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட கார்த்திக், ரமேஷ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது  செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரசேகரை தேடிவருகின்றனர்.

Related Stories:

>